படகுகளுக்கு தீ வைப்பு: எம்எல்ஏ நிவாரண உதவி

சிதம்பரம் அருகே படகுகள் எரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினார்.

சிதம்பரம் அருகே படகுகள் எரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினார்.
சிதம்பரம் அருகே சுருக்குமடி வலை பிரச்னை தொடர்பாக 4 படகுகள் அண்மையில் எரிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர் திட்டு பகுதியைச் சேர்ந்த மீனவர் குமாரின் வீட்டுக்கு சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவியை வழங்கினார். 
மேலும் இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிவாரண உதவியை  பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் முடசல் ஓடை வரை படகில் சென்ற அவர், தீ விபத்தில் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார். 
அப்போது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றியச் செயலர் அசோகன், தில்லை நகரச் செயலர் விஜயன், மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, சந்தர் ராமஜெயம், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, தன.ஜெயராமன், தமிழரசன், தமிழ்மணி, மணிமாறன் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com