புயல் பாதுகாப்பு ஒத்திகை

சிதம்பரம் அருகே கிள்ளை கூழையாறு புயல் பாதுகாப்பு மையத்தில், புயல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அருகே கிள்ளை கூழையாறு புயல் பாதுகாப்பு மையத்தில், புயல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது: மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் கிள்ளை கூழையாறு பகுதியில் புயல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு ஒத்திகை மூலம் விளக்கப்பட்டது. இதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, 70 அரசுத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர். இதில், சுகாதாரத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, மீன்வளத் துறை மற்றும் ரெட்கிராஸ் அமைப்பு, நேரு இளையோர் மையம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர். இதுபோன்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வரு
கிறது. இயற்கை இடர்பாடுகளை தவிர்க்க இதுபோன்ற பயிற்சி 
நல்லதொரு எடுத்துக்காட்டாகும் என்றார் ஆட்சியர்.
முன்னதாக, கிள்ளை பொன்னந்திட்டில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், சிதம்பரம் உதவி ஆட்சியர் விசுமகாஜன், துணை இயக்குநர் (மீன்வளம்) ரேனுகாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், புவனகிரி வட்டாட்சியர் சத்தியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com