மண்டல மாரத்தான் போட்டி
By DIN | Published On : 09th August 2019 10:19 AM | Last Updated : 09th August 2019 10:19 AM | அ+அ அ- |

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் மண்டல அளவிலான மாரத்தான் மற்றும் சதுரங்கப் போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றன.
மராத்தான் ஓட்டப் போட்டியை கல்லூரி முதல்வர் ப.குமரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். போட்டிகளில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டப் போட்டியில் மாணவர்களுக்கு 12 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 5 கி.மீ. தொலைவும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
கல்லூரியிலிருந்து கடலூர் முதுநகர் வரை சென்றுவிட்டு மீண்டும் கல்லூரியை அடையும் வகையில் போட்டிக்கான பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடல்கல்வி இயக்குநர் டி.குமணன் செய்திருந்தார். நிகழ்ச்சியில், அனைத்துக் கல்லூரிகளைச் சேர்ந்த உடல்கல்வி இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.