சுடச்சுட

  

  ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: முன்னாள் எம்.பி. வரவேற்பு

  By DIN  |   Published on : 15th August 2019 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், தேசிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவருமான வெ.குழந்தைவேலு வரவேற்பு தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தால் ஏனைய மாநிலங்களைப் போல, வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டாமல் பலவகையிலும் பிரச்னைக்குரிய மாநிலமாகவே இருந்து வந்தது. வளர்ச்சிப் பணிகள் முற்றிலும் முடங்கியதுடன், தீவிரவாத நடவடிக்கைகளும் தொடர்ந்தன.
  இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த  அரசியல் சாசன திருத்த மசோதா சட்டம் மூலம், அரசியல் சாசன விதிகளான 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்திருப்பது இந்திய வரலாற்றில் வரவேற்கத்தக்க திருப்பமாகும். இதன் மூலம் உலக அரங்கில்  மக்களாட்சியின் தத்துவம் பேணிக் காக்கப்படும் மாட்சிமைக்கு எடுத்துக்காட்டாக இந்திய நாடு விளங்குகிறது.
  மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் பகுதிகளின் மக்களுக்கான நலத் திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மட்டுமன்றி, அந்தந்தப் பகுதி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  இன்னும் அரை நூற்றாண்டு காலத்துக்காவது பிற மாநிலத்தவர்களின் குடியேற்றம், ஆக்கிரமிப்புகள், சொத்து, நிலங்களைக் கையகப்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான நிலைமைகள் ஏற்படா வண்ணம் கூடுதல் பாதுகாப்புக்கான சட்ட நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai