சுடச்சுட

  

  கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் தேசத் தலைவர்கள் குறித்த சிறப்பு ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
  கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசத் தலைவர்களின் ஓவியங்கள் தொடர்பான சிறப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புதன்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சியை கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ப.குமரன் தொடக்கி வைத்து, மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். 
  இதில், நாட்டின் சுதந்திரத்துக்கும், பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களைப் போற்றிடும் வகையிலும் அவர்களது ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியை மாணவ, மாணவிகள் இலவசமாகப் பார்வையிடும் வகையில், வருகிற  22 -ஆம் தேதி வரை நடைபெறும் என்று அருங்காட்சியக காப்பாட்சியர் செ.ஜெயரத்னா தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai