சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் செய்வதைக் கண்டித்தும், துணை வட்டாட்சியர் நிலையில் ஒருதலைப்பட்சமாகவும், மாவட்ட நிர்வாகிகள் பழிவாங்கும் நோக்குடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், தேர்தலில் செலவு செய்து நிதி ஒதுக்கீடு பெறாத சூழ்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட தேர்தல் துணை வட்டாட்சியர்களை அதே பணியிடத்தில் மீண்டும் அமர்த்தக் கோரியும், ஊழியர் விரோதப் போக்குடன் நடந்து கொள்ளும் அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். 
  அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.மகேஷ் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன், வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலர் எல்.பிரேம்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai