Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் ஆய்வகக் கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    வடலூர் - புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட ஆய்வுக் கட்டடத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
    பள்ளித் தலைமையாசிரியர் திருமுருகன் தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட முதன்மைப் பொது மேலாளர் ஆர்.மோகன், துணைப் பொது மேலாளர் மணிகண்டன், துணைத் தலைமைப் பொறியாளர்கள் லெனின், ஏழுமலை, அனில்குமார், கூடுதல் தலைமை மேலாளர் (நிதி) சண்முகசுந்தரம், தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்ட வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆய்வகக்  கட்டடங்களை அன்று பிறந்த நாள் கொண்டாடிய மூன்று மாணவிகளைக்  கொண்டு, முதன்மைப் பொது மேலாளர் ஆர்.மோகன் திறந்து வைத்தார்.
    தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியை பெனித்தா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai