Enable Javscript for better performance
மானிய விலையில் பருத்தி விதைகள்- Dinamani

சுடச்சுட

    

    மானிய விலையில் வழங்கப்படும் பருத்தி விதைகளை விவசாயிகள் பெற்று பயனடையலாம் என மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பிரேமசாந்தி தெரிவித்தார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மங்களூர்  வட்டத்தில் தற்போது காரீப் சாகுபடிக்கான பருத்தி பருவம் தொடங்கியுள்ளது. 
    திட்டக்குடி, பட்டூர், மங்களூர் வேளாண்மை விரிவாக்க மையக் கிடங்குகளில் உயர் விளைச்சல் ரகங்களான சான்று பெற்ற சுரபி பருத்தி ரக விதைகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளன. இந்த விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 
    எனவே, விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடர்பு கொண்டு பருத்தி விதைகளைப் பெற்று பயனடையலாம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai