நாளை சீருடைப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறும் சீரூடைப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறும் சீரூடைப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை போன்ற துறைகளில் காலியாக உள்ள 8,826 இடங்களை நிரப்பிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
இதற்கு விண்ணப்பித்துள்ள தகுதியானவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.  இதில், ஆண்கள் 13,240 பேர், பெண்கள் 2,494 பேர், திருநங்கைகள் 2 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். 
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் கல்லூரி, புனித வளனார் பள்ளி, புதுப்பாளையம் புனித அன்னாள் பள்ளி, சொரக்கால்பட்டு புனித மேரி பள்ளி, வில்வநகர் கிருஷ்ணசாமி பள்ளி, கம்மியம்பேட்டை புனித வளனார் பள்ளி, குமாரபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, மருதாடு கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி ஆகிய மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வு குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்வர்கள் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி அரசு அலுவலரிடம் சான்றொப்பம் (அற்ற்ங்ள்ற்ஹற்ண்ர்ய்) பெற்றிருக்க வேண்டும். அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். 
தேர்வு காலை 10 முதல் 11.20 மணி வரை நடைபெறும். எனினும், தேர்வு மையத்துக்கு காலை 8 மணிக்கே வந்துவிட வேண்டும். 
செல்லிடப்பேசிகளுக்கும், வாகனத்துக்கும் அனுமதி கிடையாது. நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com