வேளாண்மைப் பயிற்சி நிறைவு

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் தங்கிப் பயிற்சி பெற்று வந்த வேளாண்மைத் துறை இறுதியாண்டு மாணவர்களின் பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் தங்கிப் பயிற்சி பெற்று வந்த வேளாண்மைத் துறை இறுதியாண்டு மாணவர்களின் பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப்   பல்கலைக்கழக வேளாண்மைத் துறை இறுதியாண்டு மாணவர்கள் கிராமங்களில் தங்கிப் பயிற்சி பெறுவது வழக்கம். அந்த வகையில், பி-11 குழுவைச் சேர்ந்த 16 மாணவர்கள் குறிஞ்சிப்பாடி வட்டம், ஆடுர் கிராமத்தில் தங்கிப் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்தப் பயிற்சியின் இறுதி நாளான வியாழக்கிழமை மண்புழு உரம் தயாரித்தல், வீட்டு தோட்டம் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். கால்நடை மருத்துவ முகாமில் குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவர் வித்யா சங்கர் தலைமையிலான குழுவினர் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடல் புழு நீக்க மருந்தை வழங்கி
னர். தொடர்ந்து, முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அலுவலர் செந்தில்முருகன், ஊராட்சி செயலர் செந்தில் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com