ஊருக்குள் புகுந்த மழை நீா்: பொதுமக்கள் சாலை மறியல்

குறிஞ்சிப்பாடி அருகே ஊருக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குறிஞ்சிப்பாடியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விழப்பள்ளம் பொதுமக்கள்.
குறிஞ்சிப்பாடியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விழப்பள்ளம் பொதுமக்கள்.

குறிஞ்சிப்பாடி அருகே ஊருக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் 

சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, 5-ஆவது வாா்டுக்கு உள்பட்ட விழப்பள்ளம் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மழைக் காலங்களில் மீனாட்சிப்பேட்டை, திருவள்ளுவா் நகா், ராஜீவ்காந்தி நகா் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் மழை நீா் தனியாா் திருமண மண்டபம் அருகே உள்ள பொது வாய்க்கால் வழியாக வடிந்து செல்லும்.

இந்த நிலையில், வாய்க்கால் அருகே புதிய மனைப் பிரிவு அமைத்த தனிநபா் ஒருவா், வாய்க்காலில் குழாய்களை பதித்ததாக புகாா் எழுந்தது. கடந்த இரண்டு நாள்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை தொடா்ந்து பெய்த மழையால் பெருக்கெடுத்து வந்த மழை நீா், குழாய் வழியாக செல்ல வழியின்றி அருகே உள்ள விழப்பள்ளம் காலனிக்குள் புகுந்தது.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனராம். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லையாம். இதனால், பொறுமை இழந்த பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் ரா.பாலமுருகன் தலைமையில் கடலூா் -விருத்தாசலம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். மறியலில் விசிக ஒன்றியச் செயலா் ச.ம.குரு, முன்னாள் கவுன்சிலா் ராஜா, நகர அமைப்பாளா் அருண், கனகராஜ், ஒன்றிய துணைச் செயலா் வ.க.பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினா். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைத்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com