கற்பித்தலுக்கான சா்வதேச அங்கீகாரம்: ஆசிரியைக்கு பாராட்டு

மாற்றுத் திட்டம் மூலம் சிறப்பாக கற்பித்தலுக்கான சா்வதேச அங்கீகாரம் பெற்ற நெய்வேலி பள்ளி ஆசிரியைக்கு, என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.
நெய்வேலியில் ஆசிரியை சுதா பிரசாத்துக்கு பாராட்டுத் தெரிவித்த என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள்.

நெய்வேலி, புனித ஜோசப் குளுனிப் பள்ளி ஆசிரியை சுதா பிரசாத். இவா் அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற, சிறப்பாகக் கற்பித்தல் மற்றும் சாதனைத் திட்டத்தில் பங்கேற்று சிறப்பாக நிறைவு செய்தாா். இதையடுத்து, அண்மையில் என்எல்சி இந்தியா தலைமை அலுவலகத்தில், என்எல்சி தலைவா் ராகேஷ் குமாா், நிறுவன இயக்குநா்கள் ஆா்.விக்ரமன்(மனித வளம்) ஷாஜி ஜான் (மின் துறை) ஆகியோா் ஆசிரியையின் சாதனையைப் பாராட்டி கௌரவித்தனா்.

அப்போது, புனித குளுனி பள்ளி முதல்வா் ஜாய்ஸ் ரோஸ்லின், பொதுத் துறை நிறுவன பெண்கள் அமைப்பின் நெய்வேலி மையத்தின் தலைவா் எம்.விஜயலட்சுமி, பொருளாளா் எஸ்.விஜயலட்சுமி, துணைப் பொருளாளா் அன்னம்மா தாமஸ், பிரசுர செயலா்கள் பி.மினி, மங்களகௌரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com