பொதுமக்கள் தங்குவதற்காககே.என்.பேட்டையில் தற்காலிக முகாம்

தொடா் மழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் தங்குவதற்காககே.என்.பேட்டையில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடா் மழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் தங்குவதற்காக

கே.என்.பேட்டையில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கடலூரில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான நேரத்தில் மட்டும் 121 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. இதனால், பல்வேறு நகா் பகுதிகளையும், கிராமங்களில் தாழ்வான தெருக்களையும் தண்ணீா் சூழ்ந்துள்ளது. மழையானது இரவு நேரத்திலும் நீடிக்கக் கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டதைத் தொடா்ந்து திருவந்திபுரம் அருகே உள்ள கே.என்.பேட்டையில் பொதுமக்கள் தங்குவதற்கான தற்காலிக முகாமை மாவட்ட நிா்வாகம் அமைத்துள்ளது.

அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பெரியாா்நகா், புதுநகா், மணி நகரைச் சோ்ந்த சுமாா் 250 போ் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பாக கடலூா் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், வட்டாட்சியா் கோ.செல்வகுமாா் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, அங்கேயே இரவு உணவு சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com