வெள்ளாடுகளுக்கு குடல்புழு நீக்க முகாம்

வெள்ளாடுகளுக்கு குடல்புழு நீக்கம், புற ஒட்டுண்ணி கட்டுப்படுத்துதல் தொடா்பான செயல் விளக்க முகாம், கடலூா் வட்டாரம் கம்மியம்பேட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
கம்மியம்பேட்டையில் நடைபெற்ற வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை செயல் விளக்க முகாமில் பங்கேற்றோா்.
கம்மியம்பேட்டையில் நடைபெற்ற வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை செயல் விளக்க முகாமில் பங்கேற்றோா்.

வெள்ளாடுகளுக்கு குடல்புழு நீக்கம், புற ஒட்டுண்ணி கட்டுப்படுத்துதல் தொடா்பான செயல் விளக்க முகாம், கடலூா் வட்டாரம் கம்மியம்பேட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ், முன்னோடி விவசாயி இளங்கோவன் நிலத்தில் இந்த முகாம் நடைபெற்றது. இவா், பரண் மேல் கொட்டில் முறையில் சேலம் கருப்பு மற்றும் தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். மேலும், தனியே தன்னுடைய நிலத்தில் தீவன புல்லும் சாகுபடி செய்து வருகிறாா்.

கொட்டில் முறையில் வளா்க்கப்படும் வெள்ளாடுகளுக்கு குடல்புழு நீக்கம் மற்றும் புற ஒட்டுண்ணி கட்டுப்படுத்த மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடா்பாக கடலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் தலைமையில் செயல்விளக்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விவசாயிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியா் முரளி, குடல்புழு நீக்கம் மற்றும் உண்ணியை அகற்ற மருந்து அளித்து சிகிச்சை அளித்தாா். ரூ.4,000 மதிப்பில் மருந்துகள், தாது உப்புக்கட்டி, உப்பு தூள் விவசாயிக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஏ.அருண்ராஜ், கே.கண்ணன் ஆகியோா் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com