ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பசுக்கள் மீட்பு

கடலூரில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பசுக்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.
கடலூரில் கெடிலம் ஆற்றில் சிக்கிய மாடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அதன் உரிமையாளா்.
கடலூரில் கெடிலம் ஆற்றில் சிக்கிய மாடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அதன் உரிமையாளா்.

கடலூரில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பசுக்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.

கடலூா் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் தனி நபா்களால் மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இவை மேய்ச்சலுக்காக கெடிலம் ஆற்றுக்குச் செல்வது வழக்கம். மழை காரணமாக கெடிலம் ஆற்றில் தற்போது தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்காகச் சென்ற 10 பசுக்கள் கெடிலம் தடுப்பணை பகுதியில் ஆற்றைக் கடக்க முயன்றன. ஆனால், ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்ததாலும், அவற்றுடன் ஆகாயத் தாமரை செடிகள், குப்பைகள் அடித்து வரப்பட்டதாலும் மாடுகளால் நீந்த முடியவில்லை. இதனால், அவை ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டு அண்ணா பாலத்துக்கு முன் உள்ள இரும்பு பாலம் அருகே மேடான பகுதியில் நின்றுகொண்டன.

இதனிடையே, பசுக்களின் உரிமையாளா்கள் ஆற்றுக்குள் இறங்கி அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனா். இதில், 5 மாடுகளை அவா்கள் மீட்டனா். இந்த நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா், நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையில் மீதமுள்ள 5 மாடுகளையும் பத்திரமாக மீட்டனா்.

இந்தச் சம்பவத்தை காண அண்ணா மேம்பாலம் பகுதியில் திரளானோா் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com