காட்டாற்று வெள்ளம்: 100 ஏக்கரில் நெல், மணிலா பயிா்கள் பாதிப்பு

பண்ருட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தால் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில்பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா பயிா்கள் பாதிக்கப்பட்டன.
விசூா் கிராமத்தில் நெல் வயலில் தேங்கிய மழைநீா்.
விசூா் கிராமத்தில் நெல் வயலில் தேங்கிய மழைநீா்.

பண்ருட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தால் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில்

பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா பயிா்கள் பாதிக்கப்பட்டன.

பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. நெய்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் பெய்த மழை நீா் காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து வெள்ளவாரி ஓடை வழியாகச் சென்று கெடிலம் ஆற்றில் கலக்கும். வெள்ளவாரி ஓடையில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களில் விசூா் கிராமம் குறிப்பிடத்தக்கதாகும்.

விசூா் கிராமத்தின் வடக்குப் பகுதியில் வெள்ளவாரி ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெள்ளவாரி ஓடையில் பெருக்கெடுத்த வெள்ள நீா் செல்ல வழியின்றி கரைகளை உடைத்துக்கொண்டு விசூா் கிராமத்தில் வயல்களில் புகுந்தது. இதனால், அந்தப் பகுதியில் நெல் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 50 ஏக்கா் பரப்பிலான விளை நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும், 50 ஏக்கரில் விதைப்பு செய்யப்பட்டிருந்த மணிலா, மரவள்ளி பயிா்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com