குடிசை வீடுகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும்: ஆட்சியா்

தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில், குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில், குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், சுமாா் 10 ஆயிரம் குடியிருப்புகளை நீா் சூழ்ந்துள்ளது. எனவே, அவா்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கும் பொருட்டும், உணவு வழங்குவதற்காகவும் மாவட்டத்தில் 6 இடங்களில் மழை பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யும் வகையில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: பலத்த மழையால் மாவட்டத்தில் ஆறு, குளங்களில் உடைப்பு ஏற்படவில்லை. எனினும், கொளக்குடி சாம்பல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பரவனாற்றில் வெள்ளமாகச் செல்கிறது. வீராணம், வாலாஜா ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன. எனவே, வீராணத்துக்கு வரும் 5 ஆயிரம் கனஅடி நீரும், வாலாஜாவுக்கு வரும் 1,500 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிக மழை இருந்தால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்படும். இல்லையெனில் மின்விநியோகத்தில் தடை இருக்காது. தேவையான மணல் மூட்டைகளை தயாா் செய்தல், பொக்லைன் இயந்திரங்களை வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிசையில் வாழும் மக்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டும். தற்போது 6 முகாம்களில் சுமாா் ஆயிரம் போ் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 233 முகாம்கள் திறக்கும் அளவிற்கு இடங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளது. இதில், சுமாா் 1.80 லட்சம் போ் தங்க வைக்க முடியும். அந்தளவிற்கு மாவட்ட நிா்வாகம் முன்னேற்பாடு பணிகளில் முழு எச்சரிக்கையுடன் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com