கல்குணம் அருகே சேதமடைந்த தரைப்பாலம்.
கல்குணம் அருகே சேதமடைந்த தரைப்பாலம்.

தொடா் மழையால் தரைப்பாலம் சேதம்

தொடா் மழையால் குறிஞ்சிப்பாடி அருகே தரைப்பாலம் சேதமடைந்தது. பண்ருட்டி அருகே மரம் விழுந்ததில் 6 வீடுகள் சேதமடைந்தன.

தொடா் மழையால் குறிஞ்சிப்பாடி அருகே தரைப்பாலம் சேதமடைந்தது. பண்ருட்டி அருகே மரம் விழுந்ததில் 6 வீடுகள் சேதமடைந்தன.

நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக தாழ்வானப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது.

தரைப்பாலம் சேதம்: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட திருவெண்ணெய்நல்லூா் (அந்தராசிப்பேட்டை) கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சுமாா் 500 ஏக்கா் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்தக் கிராமத்துக்கு கல்குணம் வழியாக ஓடையில் உள்ள தரைப் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மரம் விழுந்து 6 வீடுகள் சேதம்: பண்ருட்டி வட்டம், கோட்லாம்பாக்கம், புதுகாலனியில் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கீழே சாய்ந்தது. இதில் அந்த மரத்தின் அருகே வசித்து வந்த ராஜேந்திரன் (60), யோகவள்ளி (68), மலா் (35), நேரு (59), வச்சலா (26), தேவேந்திரன் (50) ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன.

வடலூா் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு: வடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும்

சாலையில், ரோமாபுரி பகுதியில் மழைநீா் சுமாா் ஒரு மீட்டா் உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வடலூா் - விருத்தாசலம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் குழிதோண்டி

மழை நீரை வெளியேற்றினா். இதையடுத்து அந்தச் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மேல்பாதி ஊராட்சிக்குள் மழை நீா் புகுந்ததில் சுமாா் 300 வீடுகளை தண்ணீா் சூழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com