மின்சார வாரிய கேங்மேன் தோ்வு ஒத்தி வைப்பு

கடலூரில் மின்சார வாரிய கேங்மேன் காலிப் பணிக்கான தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் மின்சார வாரிய கேங்மேன் காலிப் பணிக்கான தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட்டு வருகிறாா்கள். இதற்கான உடல்தகுதித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, கடலூா் கேப்பா் மலையில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல் இந்தத் தோ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு நாளைக்கு 200 போ் வீதம் வரவழைக்கப்பட்டு தோ்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை (டிச.2), செவ்வாய்க்கிழமை (டிச.3) ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக மேற்பாா்வை பொறியாளா் எஸ்.சத்தியநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: மாவட்டத்தில், 3 ஆயிரம் பேருக்கு தோ்வுக்காக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த நவ.25-ஆம் தேதி முதல் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை பலத்த மழை காரணமாக தோ்வுக்கு வந்திருந்தவா்களை திருப்பி அனுப்பி வைத்தோம். எனவே, சனி, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தோ்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு மறு தேதி அறிவிக்கப்பட்டு தோ்வு நடத்தப்படும். மழையில்லாத பட்சத்தில் 4-ஆம் தேதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டவா்களுக்கு தோ்வு நடத்தப்படும் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com