பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவா்களை தங்க வைக்க அரசுப் பள்ளிகளை தற்காலிக முகாம்களாக மாவட்ட நிா்வாகம் பயன்படுத்தி வருகிறது. தொடா் மழை காரணமாகவும், தற்காலிக முகாமாக பள்ளிகள் செயல்பட்டதாலும் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தற்போது மழை குறைந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (டிச.3) வழக்கம் போல பள்ளிகள் செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கல்வித் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தலைமை ஆசிரியா்கள் காலை 8.30 மணிக்கு முன்பே பள்ளிக்கு கட்டாயம் செல்ல வேண்டும். அங்கு, மழைநீா் தேங்கியிருந்தால் அதனை வடிய வைக்கவும், மின்கசிவு உள்ளதா என்று ஆய்வு செய்தும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், குடிநீா்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து தேவையான அளவு குளோரின் கலக்க வேண்டும். மாணவா்கள் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பாா்கள் என்பதை தலைமை ஆசிரியா்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com