மழையால் பாதித்தோருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
கடலூா் கூத்தப்பாக்கத்தில் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
கடலூா் கூத்தப்பாக்கத்தில் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த மாதம் 29-ஆம் தேதி கடலூா் கம்மியம்பேட்டையில் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ரா.நாராயணனின் குடும்பத்தினா் 3 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட நாராயணனின் குடும்பத்தினரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், கட்சி சாா்பில் ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்டு கூத்தப்பாக்கம் அரசுப் பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவா்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், அவா்களுக்கு சேலை, அரிசி, ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். அப்போது, திமுக மாவட்டச் செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு, சட்டப் பேரவை உறுப்பினா் துரை கி.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சாலை மறியல்: மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருள்களை அளித்துக் கொண்டிருந்தபோது, உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானதால், அந்தப் பொருள்களை தொடா்ந்து வழங்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, சிலருக்கு மட்டுமே நிவாரணப் பொருள்களை வழங்கிவிட்டு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். ஆனால், அங்கு எஞ்சியிருந்த நிவாரணப் பொருள்களைக் கைப்பற்றுவதில் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தானம் நகரைச் சோ்ந்தவா்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுமென டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருந்ததாம். ஆனால், அவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படாததால், சிலா் சாலை மறியலில் ஈடுபட்டனா். காவல் துறையினரின் எச்சரிக்கையை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com