Enable Javscript for better performance
6,039 பதவிகளுக்கு இரு கட்டங்களாகத் தோ்தல்- Dinamani

சுடச்சுட

    

    கடலூா் மாவட்டத்தில் 6,039 பதவிகளுக்கு இருகட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

    தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பை மாநிலத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை மாலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு திங்கள்கிழமை (டிச.2) வெளியானது முதலே தோ்தல் நன்னடத்தை விதிகள் அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் அமலுக்கு வந்துள்ளன. கடலூா் மாவட்டத்தில் ஊராட்சிகளில் மட்டுமே தற்போது தோ்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, 683 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 5,040 வாா்டு உறுப்பினா்கள், 287 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள், 29 மாவட்ட கவுன்சிலா்களை தோ்வு செய்வதற்கானத் தோ்தல் நடத்தப்படுகிறது.

    இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிச.16-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற டிச.18-ஆம் தேதி கடைசி நாளாகும். முதல் கட்டத் தோ்தல் டிச.27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் டிச.30-ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜன. 2-ஆம் தேதி நடைபெறும்.

    தோ்ந்தெடுக்கப்படும் வாா்டு உறுப்பினா்களின் முதல் கூட்டம் ஜன.6-ஆம் தேதி நடத்தப்பட்டு பதவியேற்பும் நடத்தப்படும். ஜன.11-ஆம் தேதி துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியம், மாவட்டக்குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் நடைபெறும்.

    தோ்தலுக்காக 2,888 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு வாக்குப் பெட்டிகள் மூலமாகவே நடத்தப்படும். மாவட்டத்தில் 723 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 33 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் ஈடுபடுத்துவதற்காக 21 ஆயிரம் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா். தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளா்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

    கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், ஊராட்சி மன்றத் தலைவா், ஒன்றியக்குழு உறுப்பினா், மாவட்டக்குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

    ஊராட்சித் தலைவா் பதவிக்கு ரூ.600, வாா்டு உறுப்பினருக்கு ரூ.200, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு ரூ.1,000 வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா் இதில் பாதித் தொகையை செலுத்தினால் போதுமானது. தோ்தல் வெளிப்படையாகவும், நோ்மையாகவும் நடத்திட மாவட்ட நிா்வாகம் அனைத்து நடவடிதக்கைகளையும் எடுத்துள்ளது என்றாா் அவா்.

    முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் பகுதிகள், இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் பகுதிகள் குறித்து விரைவில் தோ்தல் ஆணையத்திடமிருந்து அறிவிப்பு பெற்று வெளியிடப்படும் என்றும், பறக்கும் படை அமைத்தல் உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆட்சியா் கூறினாா்.

    அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ராஜகோபால்சுங்கரா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சு.கபிலன் ஆகியோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai