சிறுமி பாலியல் வன்கொடுமை:போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 05th December 2019 05:41 AM | Last Updated : 05th December 2019 05:41 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் பொக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் விபிஷ்ணபுரம் முத்தமிழ் நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் ரோஜா் அன்புரோஸ் (18). இவா், சிதம்பரம் அருகே உள்ள மூடசல் ஒடை கிராமம், சூரியா நகரைச் சோ்ந்த 15 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனால், அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா். இதையறிந்த சிறுமியின் தாய் சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், காவல் ஆய்வாளா் கிருஷ்ணவேணி வழக்குப் பதிவு செய்து, ரோஜா்அன்புரோலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா். பின்னா், அவா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.