Enable Javscript for better performance
விபத்து வழக்குகளில் மருத்துவர், ஓட்டுநருக்கு சிறை- Dinamani

சுடச்சுட

    

    விபத்து வழக்குகளில் மருத்துவர், ஓட்டுநருக்கு சிறை

    By DIN  |   Published on : 01st February 2019 07:56 AM  |   அ+அ அ-   |    |  

    உயிரிழப்பை ஏற்படுத்திய 2 விபத்துகள் தொடர்பாக மருத்துவர், ஓட்டுநருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. 
     கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த முஸ்தபா மகன் முகமதுஅலி ஜின்னா (28). இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு டிச.16-ஆம் தேதி கடலூர் - புதுச்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். ரெட்டிச்சாவடி அருகே  சென்றபோது அந்த வழியாக வந்த கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த மருத்துவக் கல்லூரி மாணவரான மதுரை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சண்முகம் மகன் வெங்கடபிரசன்னா (25) என்பவரை கைது செய்தனர். 
    மற்றொரு வழக்கு: இதேபோல, சிதம்பரம் அருகே உள்ள சேந்திரகிளையைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சக்திவேல் (32). சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி கடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். சிப்காட் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த சக்திவேல் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் புதுச்சேரி அரியாங்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அய்யப்பனை (29) கைது செய்தனர்.
     இந்த, இரண்டு வழக்குகளும் கடலூர் இரண்டாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-2 இல் நீதிபதி அன்வர்சதாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் நீதிபதி வியாழக்கிழமை தனித் தனியாக தீர்ப்பளித்தார். அதில், வாகனத்தை கவனக் குறைவாக இயக்கிய மருத்துவர் வெங்கடபிரசன்னாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். தற்போது, வெங்கடபிரசன்னா மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறாராம்.  அதேபோல, மற்றொரு வழக்கில் லாரி ஓட்டுநர் அய்யப்பனுக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் அழகேசன் ஆஜரானார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp