மணல் சேமிப்புக் கிடங்கில் முறைகேடு: மேலாளர் உள்பட 4 பேர் கைது

எஸ்.ஏரிப்பாளையம் மணல் சேமிப்புக் கிடங்கு முறைகேடு தொடர்பாக மேலாளர் உள்பட  4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.

எஸ்.ஏரிப்பாளையம் மணல் சேமிப்புக் கிடங்கு முறைகேடு தொடர்பாக மேலாளர் உள்பட  4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.

பண்ருட்டி  வட்டம், எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. 

இந்த குவாரியில் எடுக்கப்படும் மணல், லாரிகள் மூலம் பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் கொட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், மணல் சேமிப்புக் கிடங்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை நிறுத்திவிட்டு, லாரிகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட நடைகள் முறைகேடாக மணல்  எடுத்துச் செல்லப்படுவதாக புகார் எழுந்தது. 

இதுதொடர்பாக அனைத்துக் கட்சியினரும் அண்மையில் போராட்டம் நடத்தினர். 

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய புதுப்பேட்டை போலீஸார் மணல் சேமிப்பு கிடங்கு மேலாளர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சபரிநாதன் (27), ஊழியர்கள் சக்திவேல் (41), ராஜேஷ், பாலபாஸ்கர் (22) ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com