சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே தீ விபத்தில் கரும்பு தோட்டம் சேதமடைந்தது. 
   பண்ருட்டி அருகே உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (50). இவருக்கு, அய்யனார்கோயில்பாட்டை அருகே 4 ஏக்கரில் கரும்புத் தோட்டம் உள்ளதாம்.
   செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வே.மணி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் கரும்புகள் எரிந்து சேதமடைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai