சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் அங்கம்-22 சார்பில் தேசிய வாக்காளர் தின கருத்தரங்கம்  பொறியியல் புலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
   திட்ட அலுவலர் கே.தமிழ்மாறன் வரவேற்றார். பொறியியல் புல முதல்வர் என்.கிருஷ்ணமோகன் கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் தலைமை வகித்தார். சிதம்பரம் வட்டாட்சியர் ஏ.ஹரிதாஸ், துணை வட்டாட்சியர் (தேர்தல்) கே.இலஞ்சூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   அறிவியல் துறைத் தலைவர் தேவநாதன், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை உதவிப் பேராசிரியர் செல்வக்குமார் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கே.தமிழ்மாறன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai