சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  வழக்குரைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சேம நல நிதியை அதிகரிக்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மூத்த வழக்குரைஞர் அம்பேத்கர் தலைமை வகித்தார். 
  வழக்குரைஞர்கள் சந்திரசேகர், முன்னாள் அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவர் ஆனந்தகண்ணன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், அவற்றை செயல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாகக் கூறியும் முழக்கங்களை எழுப்பினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai