சுடச்சுட

  

  விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி, முஸ்லிம் சமுதாய முன்னேற்ற சேவை மையத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட வட்டங்களை உள்ளடக்கி விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் சமுதாய முன்னேற்ற சேவை மையம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சத்தார்பாஷா தலைமை வகித்தார். முகமதுபஷீர், பத்ரூ, விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தர்ராஜன், ஓவியர் ராஜ்மோகன், கதிர்காமன், பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அப்துல்ஹமீது வரவேற்றார்.
  ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவித்ததுபோல், விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள்  எழுப்பப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai