இளைஞர்கள் தொழில் முனைவோராக வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர்  வெ.அன்புச்செல்வன் கேட்டுக் கொண்டார்.

இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர்  வெ.அன்புச்செல்வன் கேட்டுக் கொண்டார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், "தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி' கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து கண்காட்சியைத் திறந்துவைத்தார். பின்னர், கருத்தரங்கை தொடக்கிவைத்து ஆட்சியர் பேசியதாவது: 
கடலூர் மாவட்ட இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து இதுபோன்ற கருத்தரங்குகளில் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கக் கடலில் சிறிய அளவில் நில அதிர்வு ஏற்பட்டதைக் கூட தகவல் தொழில்நுட்பம் மூலம் உடனடியாக நாம் தெரிந்துக் கொண்டோம். 
தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியைப் போல எதிர்காலத்தில் விவசாயத்திலும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு, தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில், தொழில் நெறி வழிகாட்டி கையேட்டை ஆட்சியர் வெளியிட்டார். 
மேலும், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில், உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. 
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பாலமுருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத் துறை நல அமைப்பாளர் பு.விஜயகுமார், புனித வளனார் கல்லூரி செயலர் பீட்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com