திருஅருள்பா முற்றோதல்

கடலூர் சாம்பசிவம் நகரில் உள்ள வள்ளலார் தொண்டு மையத்தில் 9-ஆவது ஆண்டு திருஅருள்பா முற்றோதல் 3 நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

கடலூர் சாம்பசிவம் நகரில் உள்ள வள்ளலார் தொண்டு மையத்தில் 9-ஆவது ஆண்டு திருஅருள்பா முற்றோதல் 3 நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சாது.சா.ராசதுரை தலைமை வகித்தார். வள்ளலார் இயற்றிய 5,818 பாடல்களும் 3 நாள்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையில் தொடர்ந்து பாடப்பட்டன. 
இந்த நிகழ்வுகளில் கடலூர், புதுவை, வடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து திரளானோர் பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார், பொது சுகாதாரத் துறை முன்னாள் இணை இயக்குநர் பொற்கைப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். உலகில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக சபையின் நிர்வாக இயக்குநர்  ரா.ராணி கூறினார்.  நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்பர்கள் சிவஜோதி, ஆத்மலிங்கம், லோகநாதன், தட்சிணாமூர்த்தி, கணேசன், வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com