ஓய்வுபெற்றோர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
By DIN | Published On : 14th February 2019 08:55 AM | Last Updated : 14th February 2019 08:55 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு வருகிற 27- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் நடைபெறும்.
மேலும் இதுதொடர்பான முன்னாய்வுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் என செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.