முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கடலூர் நகராட்சி புதிய அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 28th February 2019 08:49 AM | Last Updated : 28th February 2019 08:49 AM | அ+அ அ- |

கடலூர் நகராட்சிக்கு ரூ. 5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
கடலூர் நகராட்சி 45 வார்டுகளுடன் செயல்படுகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரின் வளர்ச்சிக்கேற்ப நகராட்சி அலுவலகமும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், புதிய நகராட்சி கட்டடம் கட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2016 -ஆம் ஆண்டு நகராட்சி வளாகத்திலேயே சுமார் 15 ஆயிரம் சதுர அடியில் ரூ. 5 கோடியில் புதிய ஒருங்கிணைந்த வளாகம் கட்டும் பணிகள் தொடங்
கின.
இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், புதன்கிழமை காணொலிக் காட்சி மூலமாக புதிய அலுவலகத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்
தார்.
இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் ப.அரவிந்த்ஜோதி தலைமையில், புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. கீழ்தளம், முதல் தளம் கொண்ட இந்த அலுவலகத்தில் அனைத்துப் பிரிவுகளும் ஒருங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில் நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமரன், துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், முன்னாள் கவுன்சிலர்கள் வ.கந்தன், அன்பு, தமிழ்ச்செல்வன், மணி நகராட்சி மேலாளர் ஜி.பழனி, பொறியாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.