முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
காவலருக்கு கொலை மிரட்டல்: 4 பேர் கைது
By DIN | Published On : 28th February 2019 08:49 AM | Last Updated : 28th February 2019 08:49 AM | அ+அ அ- |

காவலரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக அறிவுநாதன் பணியாற்றி வருகிறார்.
இவர், செவ்வாய்க்கிழமை அங்குசெட்டிப்பாளையம் அரசு மணல் குவாரி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சண்டையிட்டுக் கொண்டிருந்த பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (25), அங்குசெட்டிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வம் (28), சத்தியகுமார் (36), திருச்சி சுப்பிரமணியபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த ரகுமான் ஷரீப் (48) ஆகியோரை கலைந்து செல்லும்படி கூறினா
ராம்.
அப்போது, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காவலர் அறிவுநாதனை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் அறிவுநாதன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் 4 பேரை
கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.