முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
தமிழ்நாடு ஓய்ஹவூதியர் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 28th February 2019 08:48 AM | Last Updated : 28th February 2019 08:48 AM | அ+அ அ- |

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் திட்டக்குடி வட்டக் கிளை பொதுக்குழு கூட்டம் திட்டக்குடியில் கிளைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. நிர்வாகிகள் வளையாபதி, கருப்பையா, கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ந.பாண்டியன், செயலர் த.கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், வட்டக் கிளை தலைவராக டி.அரசன், செயலராக டி.வேலாயுதம், பொருளாளராக டி.கருப்பையா, மகளிரணிச் செயலராக ஜி.மணி மற்றும் 7 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.7-ஆவது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். காஷ்மீரில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.