முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.81 லட்சம் உதவித் தொகை
By DIN | Published On : 28th February 2019 08:47 AM | Last Updated : 28th February 2019 08:47 AM | அ+அ அ- |

தேசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.5.81 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன்படி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் 2017-18-ஆம் நிதியாண்டில் இந்த விளையாட்டு உதவித் தொகையைப் பெறுவதற்கான தகுதியை 10 பள்ளி மாணவ, மாணவிகளும், 37 கல்லூரி மாணவ, மாணவிகளும் பெற்றனர். இவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து மொத்தம் 47 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.5.81 லட்சம் உதவித் தொகையை காசோலையாக வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா செய்திருந்தார்.