சுடச்சுட

  

  அரசுப் பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டி: மாவட்ட ஆட்சியர் அழைப்பு

  By DIN  |   Published on : 01st January 2019 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அழைப்பு விடுத்தார். 
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கடலூர் பிரிவு மூலம் மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகின்றன. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் அன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை போட்டிகள் நடைபெறும். 
  இதில், ஆண்களுக்கான தடகளத்தில் 100மீ, 200மீ, 800மீ, 1,500மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400மீ தொடர் ஓட்டம்  ஆகியவையும், பெண்கள் பிரிவில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மேலும், இருபாலருக்கும் தனித் தனியாக இறகுப் பந்து, டென்னிஸ்,  கபடி, வாலிபால், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளும், ஆண்களுக்கு மட்டும் கால்பந்து போட்டியும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் அரசுத் துறைகளில் முழுநேரப் பணிபுரியும் அரசு அலுவலர்கள், காவல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள், விளையாட்டு அலுவலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உடற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் பங்கேற்க தகுதியுடையோராவர். எனினும், அரசுப் பணியில் சேர்ந்து 6 மாதங்கள் நிறைவடையாதவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது.
  பங்கேற்போர் தங்களது பெயரை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வருகிற 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04142-220 590, 7401703495 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai