சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை  விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
   2017-18-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு கடனில் வரவு வைக்காமல்
  வழங்கிட வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கணக்கு தொடங்கப்பட்டு அதற்கான புத்தகம் வழங்கப்படவில்லை. உடனடியாக பாஸ் புத்தகம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக அதற்கான தொகையை ஐசிஐசிஐ 
  காப்பீட்டு நிறுவனத்திடம் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மேற்கூறிய போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். விவசாயிகளுடன் அலுவலர்கள் 
  பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், விவசாயிகளுக்கு ஒரு வாரத்துக்குள் பயிர்க் காப்பீடு தொகை ரூ.8 கோடி வழங்கப்படும், வங்கி பாஸ் புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai