சுடச்சுட

  

  என்எல்சி சுரங்க விரிவாக்கம்: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 01st January 2019 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  என்எல்சி சுரங்க விரிவாக்கத்தைக்  கண்டித்து விருத்தாசலத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
   நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் மூன்றாவது சுரங்க விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, சுமார் 30 கிராமங்களில் 12,500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் கோ.மாதவன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் டி.ரவிந்திரன், மாவட்ட செயலர் எஸ்.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
  ஆர்ப்பாட்டத்தில், 3 போகமும் விளையும்பூமியை பாதுகாக்க வேண்டும். கடந்த 1956 முதல் 2018-ஆம் ஆண்டு வரை என்எல்சி நிறுவனம் விவசாயிகள் நிலம், வீடுகளை எடுத்துக்கொண்டபோதிலும், அவர்களுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்கவில்லை. எனவே, 3-ஆவது சுரங்கம் என்ற பெயரில் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai