சுடச்சுட

  

  சிதம்பரம் வட்ட ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் 5-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
   விழாவுக்கு சங்கத் தலைவர் ஏ.முகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் அர.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். கோ.சுந்தரவதனம் குறள் விளக்கம் அளித்தார். செயலர் ரா.பன்னீர்செல்வம் ஆண்டறிக்கை படித்தார். பொருளாளர் ரா.கோவிந்தராஜன் வரவு-செலவு கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தார். விழாவில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் அ.நடராஜன், கோ.தமிழரசன், நா.சின்னதுரை ஆகியோர் தீர்மானங்கள் தொகுத்து வழங்கினர்.
   சிதம்பரம் உதவி ஆட்சியர் விசு மகாஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மூத்த உறுப்பினர்களை  கௌரவித்து, பரிசு வழங்கிப் பேசினார். சென்டரல் ரோட்டரி சங்க சாசனத் தலைவர் பி.முகமதுயாசின் 2019-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியை வெளியிட்டு பேசினார். முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஜி.முஸ்தபா கமால் வாழ்த்துரையாற்றினார். விழாவில் ஓய்வுபெற்ற பேராசிரியர் பி.பன்னீர்செல்வம், பேராசிரியர் எஸ்.பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். சங்கத் தலைவர் ஏ.முகமது இப்ராஹீம் நிறைவுரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் நா.சின்னதுரை நன்றி கூறினார். நிகழ்ச்சியை சா.ஞானப்பிரகாசம் தொகுத்து வழங்கினார்.
   கூட்டத்தில், ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai