சுடச்சுட

  

  திட்டக்குடி பகுதியில் தொடர் வாகனத் திருட்டு தொடர்பாக ஒருவர் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டார்.  
  திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள்  தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, திட்டக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் மேற்பார்வையில், ராமநத்தம் ஆய்வாளர் சுதாகர் தலைமையில் தனிப் படை அமைத்து காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவிட்டார். தனிப் படையினர் இந்தப் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 
  ஞாயிற்றுக்கிழமை இரவு அரங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினாராம். இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற தியாகராஜன் (48) எனத் தெரியவந்தது. இவர் ராமநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடியதும், மேலும் 3 இடங்களில் பெண்களிடம் நகை பறித்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து, அவரை கைதுசெய்த தனிப் படை போலீஸார் அவரிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள், 15 பவுன் நகைகளை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai