சுடச்சுட

  

  நெகிழிப் பொருள்கள் மீதான தடையை மீறினால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்

  By DIN  |   Published on : 01st January 2019 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதற்கான தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எச்சரித்தார்.
  தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி முதல் நெகிழிப் பொருள்களை பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது.
   கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:  ஒருமுறை பயன்படுத்திய பிறகு தூக்கி வீசப்படும் 14 வகையான நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை முற்றிலும் தடை செய்து கடந்த ஜுன் 25-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 
  எனவே, தடை செய்யப்பட்டுள்ள 14 நெகிழிப் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு அதிகளவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய அனைத்து அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பொருள்களை பயன்படுத்தும் வியாபாரிகளிடமிருந்து அவற்றை பறிமுதல் 
  செய்வதோடு, பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருக்க ஆட்டோ மூலம் பிரசாரம் செய்ய வேண்டும். நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருள்களை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் தயாரிப்பதற்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ அலுவலகங்களை பொது மக்கள் அணுகலாம்.  எனவே, பொதுமக்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை செவ்வாய்க்கிழமை (ஜன.1) முதல் முற்றிலும் தவிர்த்து, அதற்கு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். தடையை மீறி நெகிழிப் பொருள்களை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள், 
  வியாபாரிகள், பொதுமக்கள் மீது அரசாணையின்படி உரிய அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர். 
   கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராஜகிருபாகரன், விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், கடலூர் சார்-ஆட்சியர் (பொ) வீ.வெற்றிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.சந்தோஷினி சந்திரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai