சுடச்சுட

  

  நெல் பயிரில் புகையான் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

  By DIN  |   Published on : 01st January 2019 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் நெல் பயிரில் புகையான் நோய்த் தாக்குதல் அதிகளவில் தென்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
   இந்தப் பகுதிகளில் வசிப்போரில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். வறட்சியின் காரணமான கடந்த 2 ஆண்டுகளாக நெல்பயிர் சாகுபடி சரிவர நடைபெறவில்லை. நிகழாண்டு மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் நெல் விதைப்புப் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டனர். ஆந்திரா பொன்னி என அழைக்கப்படும் பிபிடி என்ற நெல் ரகத்தை அதிகமானோர் பயிரிட்டனர். அறுவடைக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது  நெல்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். 
   இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நெல் விளைச்சல் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்தே எங்களது குடும்ப அத்தியாவசிய செலவுகளை கவனித்து வருகிறோம். தற்போது விளைச்சலை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் கைத்திருந்த நிலையில், நெல் பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மருந்துகளை பயன்படுத்தியும் நோய் பாதிப்பு குறையவில்லை. சாதாரணமாக ஏக்கருக்கு 40 மூட்டைகள் நெல் கிடைக்கும் என்றார், புகையான் தாக்குதலால் ஏக்கருக்கு 20 மூட்டைகள் நெல் மட்டுமே கிடைக்கும். இதனால் நிகழாண்டு காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளில் உணவு உற்பத்தியில் பெரிதும் பாதிப்பு ஏற்படும். எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடனை ரத்துசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai