சுடச்சுட

  

  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டாதாரிகள் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது.
   கூட்டத்துக்கு,  சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலர் ச.அசோக்குமார் வரவேற்றார். சென்னை தமிழ்நாடு தலைமை செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் தமிழ் செம்மொழி பேரவை தலைவர் ரா.சஞ்சீவிராயர், விவசாய சங்க மாநிலத் தலைவர் வி.கே. குமரகுரு, உயர்நீதிமன்ற வழக்குரைஞர் டி.கதிரேசன், பட்டதாரிகள் நலச் சங்க மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல், மாவட்டச் செயலர் வி.சிவகுமார், துணைத் தலைவர் எஸ்.வீரப்பன், விருத்தாசலம்  ஒன்றியப் பொறுப்பாளர் டி.வெங்கடேசன், எழிலேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   கூட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைப்பது. இட ஒதுக்கீடு கொள்கையில் சமுதாய விழுக்காட்டின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுவது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்த ஆலோசிப்பது. பெண்களுக்கான பாலியல் அச்சுறுத்தலை தவிர்க்க விழிப்புணர்வு சம்பந்தமாக விவாதிப்பது. 
  தேசிய நுழைவு தேர்வில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோருவது ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநில துணைத் தலைவர் ராமசாமி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai