சுடச்சுட

  

  பொங்கல்: 5.81 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

  By DIN  |   Published on : 01st January 2019 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் 5.81 லட்சம் பேருக்கு அரசு சார்பில் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை மக்கள் உள்பட அனைவரும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலைகளை வழங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் வேட்டி, சேலை விநியோகத்தை கடலூர் நகர அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விலையில்லா சேலை, வேட்டியை 100 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
  பின்னர், அவர் பேசியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் 5.81 லட்சம் பேருக்கு விலையில்லா சேலை, வேட்டிகள் வழங்கப்படுகின்றன. இதில் வட்டம் வாரியாக கடலூர்-79, 854, பண்ருட்டி-97,825, குறிஞ்சிப்பாடி-66,539, சிதம்பரம்-45,332, புவனகிரி- 47,554, காட்டுமன்னார்கோவில்- 43,731, ஸ்ரீமுஷ்ணம்- 29,697, விருத்தாசலம் -89,806, திட்டக்குடி- 56,752, வேப்பூர் வட்டத்தில்  23,702 பேருக்கு வழங்கப்படுகிறது என்றார் அமைச்சர்.
  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், சார்-ஆட்சியர் (பொ) வீ.வெற்றிவேல், மாவட்ட சமூக நல அலுவலர் கோ.அன்பழகி, வட்டாட்சியர் ப.சத்தியன், நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.குமரன், முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், கவுன்சிலர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai