சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
    கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருகிற ஜன. 23-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், கடலூர் நகர செயலர் மு.செந்தில், கடலூர் ஒன்றிய துணைச் செயலர் தனசேகர், மாவட்ட நிர்வாகிகள் ரகுராம்சிங், வீரமணி, பிரபு, காட்டுராஜா, சிறுத்தை சிவா, ஆறுமுகம், நந்தகுமார், கதிர், ஜெங்கால், அன்பரசன், நடராஜன், கந்தல், வைத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai