சுடச்சுட

  

  கடலூர் திருப்பாதிரிபுலியூர் குமாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் க.சொக்கலிங்கம் (42). விழுப்புரத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர், புவனகிரி அருகே உள்ள சேர்ந்திரக்கிள்ளை அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சோனா பேட்ரிஷியா (39) என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டாராம். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். 
  சொக்கலிங்கத்தின் நெருங்கிய உறவினர்கள் அவருடன் பேசுவதில்லையாம். இதனால், மன உளைச்சலில் இருந்தாராம். பலமுறை தற்கொலைக்கு முயற்சித்தவர் மனைவியால் காப்பாற்றப்பட்டாராம். இந்த நிலையில், அவருக்கும் மனைவிக்கும் அண்மையில் தகராறு ஏற்பட்டதாம். இதில், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சொக்கலிங்கம் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai