சுடச்சுட

  

  நெகிழி பயன்பாடு ஒழிப்பு: குடியிருப்போர் சங்கம் ஆலோசனை

  By DIN  |   Published on : 02nd January 2019 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
  கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இணைப் பொதுச் செயலர் டி.பி.புருஷோத்தமன், துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் மு.மருதவாணன் சங்கப் பணிகள், எதிர்கால  திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். 
  கூட்டத்தில், தமிழக அரசின் நெகிழி தடை உத்தரவுக்கு வரவேற்பு அளிப்பதோடு, இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்குவது, பிரசாரத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கை அம்ரூத் திட்ட வழிகாட்டுதலின்படி உடனடியாக அகற்ற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். கம்மியம்பேட்டை சாலை, கெடிலம் ஆற்றுச் சாலை ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  முன்னதாக, எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், துணிப் பைகளும் வழங்கப்பட்டன (படம்). முன்னதாக துணைத் தலைவர் மனோகரன் வரவேற்க, பொருளாளர் கே.பி.சுகுமாறன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai