சுடச்சுட

  

  மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, மின் வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர்  செம்மண்டலத்தில் உள்ள மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வாயில்கூட்டம் நடைபெற்றது. 
  கூட்டத்துக்கு தொமுச தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மின்சார தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலர் ரவிசங்கர், தொழிலாளர் ஐக்கிய சங்க மாவட்ட செயலர் டி.ரவிச்சந்திரன், தொமுச மாநில துணைத் தலைவர் கே.வேல்முருகன், சிஐடியூ மாநிலச் செயலர் டி.பழனிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது, மின்சார சட்ட திருத்த மசோதாவால் மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கிக் கூறினர்.  கூட்டத்தில், தொழிலாளர் ஐக்கிய சங்கம் சார்பில் சுப்பிரமணியன், ஐக்கிய சங்கம் வி.சரவணன், சம்மேளனம் ஆர்.சந்தானம், சிஐடியூ மாவட்ட செயலர் என்.தேசிங்கு, பொருளாளர் என்.கோவிந்தராசு, துணைத் தலைவர் எல்.பாலசுப்பிரமணியன், தொமுச துணைத் தலைவர் ஜெ.பழனிவேல், ஆலோசகர் டி.ஈஸ்வரன், இணைச் செயலர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகி டி.ஜீவா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai