சுடச்சுட

  

  சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அறிவுரை

  By DIN  |   Published on : 03rd January 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாலை விதிகளை மதித்து பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மந்தாரக்குப்பம் போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு புதன்கிழமை அறிவுரை வழங்கினர்.
  கடலூர் மாவட்டக் காவல் 
  கண்காணிப்பாளர் ப.சரவணன் 2019-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். 
  இதையடுத்து, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸார் வாகன விபத்துகள், சாலை வீதி மீறல் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
   இந்த நிலையில், புதன்கிழமை மந்தாரக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில், காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள், இருக்கை பட்டை அணியாத வாகன ஓட்டிகள், சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளைத் தடுத்து நிறுத்தி, அறிவுரைக் கூறி, சாலை விதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும், மறுமுறை தவறு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai